சென்னை,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இந்த தொடரில் இதுவரை 38 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன.
இதன் முடிவில் புள்ளி பட்டியலில் அணிகளின் நிலை குறித்து இங்கு காணலாம்..!
குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் தலா 10 புள்ளிகள் ( 5 வெற்றிகள்) பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் குஜராத் முதலிடத்திலும், டெல்லி 2-வது இடத்திலும், பெங்களூரு 3-வது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் 4-வது இடத்திலும் மற்றும் லக்னோ 5-வது இடத்திலும் உள்ளன.
இதனையடுத்து 8 புள்ளிகள் பெற்ற நிலையில் மும்பை 6-வது இடத்தில் உள்ளது. அடுத்து கொல்கத்தா 7-வது இடத்தில் உள்ளது.
கடைசி 3 இடங்களில் முறையே தலா 4 புள்ளிகள் மட்டுமே பெற்ற நிலையில் ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் ராயல்ஸ் 8-வது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 9-வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 10-வது இடத்திலும் தவிக்கின்றன.