அகமதாபாத்,
குஜராத் அணிக்கு எதிரான தோல்வி குறித்து பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் கூறியதாவது;
இந்த ஆடுகளத்தில் நாங்கள் அடித்த ரன்கள் போதுமானதாக இல்லை என்று நினைக்கிறேன். புல் அடர்த்தியாக இருந்ததால் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவியது. சுப்மன் கில் பவர்பிளேயில் அற்புதமாக விளையாடினார். அவர் எங்களுக்கு அழுத்தம் கொடுத்தார்.
ஆனால் நாங்கள் மீண்டு வந்து 16வது ஓவர் வரை ஆட்டத்தை நீட்டித்த விதம், ஒரு சாதகமான விஷயம் என்று நினைக்கிறேன். நாங்கள் மிடில் ஓவர்களில் நிறைய விக்கெட்டுகளை இழந்தோம். அது எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. ஒரு நல்ல கிரிக்கெட்டை விளையாடுவதே எங்கள் நோக்கம்."
இவ்வாறு அவர் கூறினார்.