வாஷிங்டன்,
4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18 தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்துள்ள சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், வாஷிங்டன் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இந்நிலையில், மேஜர் லீக் கிரிக்கெட்டில் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் வாஷிங்டன் பிரிடம் எம்.ஐ. நியூயார்க் அணிகள் மோதின.
டாஸ் வென்ற வாஷிங்டன் பிரீடம் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 266 ரன்களைக் குவித்தது.
நியூயார்க் அணியில் குயின்டன் டி காக் 51 ரன் குவித்து ஆட்டமிழ்ந்தார்.
நிகோலஸ் பூரன் 31 பந்தில் தனது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். அத்துடன், மேஜர் லீக் தொடரில் அதிவேக சதமடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். 13 சிக்சர், 5 பவுண்டரி அடித்த பூரன் 106 ரன்னில் அவுட்டானார். அடுத்து அதிரடியாக ஆடிய பொல்லார்டு 64 ரன் குவித்தார்.
கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வாஷிங்டன் பிரீடம் அணி 18.4 ஓவரிலேயே எட்டி டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய ரன் சேசிங் சாதனையைப் படைத்தது. அத்துடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.
3வது விக்கெட்டுக்கு இணைந்த ஸ்டீவ் ஸ்மித், ஆண்ட்ரிஸ் கவுஸ் ஜோடி 241 ரன்கள் எடுத்து அணியை வெற்றிபெற வைத்தனர். ஆண்ட்ரிஸ் கவுஸ் 12 சிக்சர், 10 பவுண்டரி உள்பட 132 ரன்னும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், 9 சிக்சர், 7 பவுண்டரி உட்பட 110 ரன்கள் குவித்தனர்.