இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.
இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னெர் கூறுகையில்,
'ஆக்லாந்து ஈடன்பார்க்கில் விளையாடும் போது மைதானத்தின் அளவுஎப்போதும் உங்கள் மனதில் இருக்க வேண்டும். இங்கு பந்து சற்று எழும்பி வரும். இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானது. மேலும் காற்று சுழன்றடிக்கும் என்பதால் கேட்ச் செய்வது இங்கு கடினமாக இருக்கும்.
ரோகித் சர்மா, விராட் கோலி வயதாகி வந்தாலும் இன்னும் அவர்கள் சிறப்பாகவே விளையாடுகிறார்கள். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடந்த தொடரில் இதை கண்டோம். ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் இவர்களின் ஆட்டத்தை கவனித்தி ருக்கிறேன். இந்தியாவின் பேட்டிங் வரிசை குறித்தும். வெவ்வேறு சூழலில் அந்த மூத்த வீரர்களுக்கு எதிராக எப்படி பந்து வீசுவது என்பது குறித்தும் ஏற்கனவே ஆலோசித்து திட்டமிட்டுள்ளோம். இங்குள்ள ஆடுகளங்களில் எப்படி பந்து வீச வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்' என்றார்.