கிரிக்கெட்

தோனியின் திட்டம் இதுதான்: முன்னாள் கிரிக்கெட் வீரர் பரபரப்பு கருத்து

தோனி மிகவும் புத்திசாலித்தனமாகச் செயல்படுகிறார், அவர் வேண்டும் என்றே மைதானத்திற்கு வருவதைத் தவிர்க்கிறார் என சைமன் டவுல் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் முன்னாள் கேப்டனுமான தோனி. நடப்பு ஐபிஎல் தொடரில் இன்னும் ஒரு போட்டியில் கூட சிஎஸ்கேவிற்காக விளையாடவில்லை 44-வயதான தோனி, கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக துவக்க போட்டிகளில் விளையாடாமால் இருந்தார்.

தற்போது காயத்தில் இருந்து மீண்ட போதிலும் தோனி இன்னும் சிஎஸ்கேவிற்காக விளையாடவில்லை. பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அவர் உடல் தகுதியை எட்டிவிட்டார் என்று ரசிகர்கள் நம்பும் நிலையில், அவர் போட்டியில் இன்னும் களமிறங்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

இந்த நிலையில், நியூசிலாந்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சைமன் டவுல் கூறுகையில், தோனி திட்டமிட்டே விளையாடாமல் இருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “தோனி மிகவும் புத்திசாலித்தனமாகச் செயல்படுகிறார். அவர் வேண்டும் என்றே மைதானத்திற்கு வருவதைத் தவிர்க்கிறார். அவர் மைதானத்தில் இருந்தால், கேமராக்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் அவர் பக்கமே கவனம் செலுத்துவார்கள். இது புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் ஆதிக்கத்தைக் குறைத்துவிடும். 'எம்எஸ் எபெக்ட்' எனப்படும் தோனியின் நிழல் ருதுராஜ் மீது விழக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்” என்றார்.