கிரிக்கெட்

2027 உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமா? - இந்திய அணிக்கு சேவாக் சொன்ன முக்கிய ஆலோசனை

2027 ஒருநாள் உலகக் கோப்பை அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

2027-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெல்ல வேண்டுமானால், பந்துவீச்சுத் துறையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

பும்ரா

அவர் பேசுகையில், ‘இந்திய அணியின் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா முக்கியப் பங்கு வகிப்பார். அவரின் வேகம், மாறுபட்ட பந்துவீச்சு மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படும் திறன் ஆகியவை உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு பெரிய பலமாக அமையும்’ என்றார்.

சுப்மன் கில்

இந்திய அணியின் பேட்டிங் வரிசை குறித்து திருப்தி தெரிவித்த சேவாக், சுப்மன் கில் போன்ற வீரர்கள் தொடர்ந்து ரன் குவிப்பது அணிக்குப் பெரிய பலம் என்று பாராட்டியுள்ளார்.

பேட்டிங் பிரிவு பெரிய ஸ்கோரை எடுக்க உதவும் என்றாலும், எதிரணியின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தி முக்கியமான போட்டிகளில் வெற்றி பெற பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பதிலடி கிடைக்குமா?

2023-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த இந்திய அணி, 2027-ல் கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கும்.

2027 ஒருநாள் உலகக் கோப்பை அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய மூன்று நாடுகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

SCROLL FOR NEXT