கிரிக்கெட்

குஜராத்துக்கு எதிரான தோல்விக்கு காரணம் இதுதான் - ருதுராஜ் கெய்க்வாட்

தொடக்கத்திலேயே அதிக விக்கெட்டுகளை இழந்துவிட்டோம் என ருதுராஜ் கெய்க்வாட் கூறினார்.

சென்னை,

சென்னையில் நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது;

“தொடக்கத்திலேயே அதிக விக்கெட்டுகளை இழந்திருக்காவிட்டால், நாங்கள் 170 அல்லது 180 ரன்களை எட்டியிருப்போம். இந்த ரன்கள் எடுத்திருந்தால், அது ஒரு சிறப்பான போட்டியாக இருந்திருக்கும். சில ஷாட்களை ஆடுவது சற்று கடினமாக இருந்தது. உண்மையைச் சொல்லப்போனால், இந்த ஆடுகளத்தை நான் எதிர்பார்க்கவில்லை. ஆடுகளம் எப்படி அமையப்போகிறது என்பதைக் கணிப்பது மிகவும் கடினம்.

நாங்கள் இங்கு விளையாடிய கடைசி மூன்று ஆட்டங்களில், ஆடுகளம் எப்படி இருக்கும் என்பதை நாங்கள் ஓரளவு தெரிந்துகொண்டோம். ஆனால் இந்த ஆட்டத்தில், ஆடுகளம் எப்படி இருக்கும் என்பது பற்றி எங்களுக்கு எந்த யோசனையும் இல்லை. பந்து வேகமாகவும், பவுண்ஸ் ஆகியும் வந்தது. சில நேரங்களில் குறைவாக பவுண்ஸ் ஆகி வந்தது. ஆடுகள தன்மைக்கேற்க விளையாட மிகவும் கடினமாக இருந்தது.

ஸ்கோர்கார்டில் குறைவான ரன்கள் இருந்ததை பார்க்கும்போது ஏமாற்றமளித்தது. குஜராத் அணியினர் சிறப்பாக செயல்பட்டனர். தோல்வியை ஒதுக்கி வைத்துவிட்டு அடுத்த ஆட்டத்தை எதிர்நோக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் கூறினார்.