மும்பை,
டி20 உலகக் கோப்பை தொடரில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்றது. கொழும்புவில் நேற்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிரடி காட்டிய இஷான் கிஷன் இ (77 ரன், 40 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார்.
இதனையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இறுதியில் 18 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தது.இதனால் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் தோல்வி தொடர்பாக பேசிய பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் கூறுகையில்,
'தொடக்கத்தில் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந் தது. நாங்கள் நன்றாகவே தொடங்கினோம். ஆனால் இஷான் கிஷன் அதிரடியாக ரன் குவித்து எங்களிடம் இருந்து ஆட்டத்தை தட்டிப்பறித்து விட்டார். அச்சமின்றி ஆடிய அவரால் இரண்டு முனையிலும் ரன்கள் எடுக்க முடிந்தது. இது 'பவர்-பிளே'யில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சவா லாக அமைந்தது.இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஆட்டம் மிகப்பெரிய நிகழ்வு என்பதை அறிவோம். தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் வென்று இருந்ததால் (உல கக் கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3-ல் வெற்றி) மிகுந்த நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால் இந்தியா எங்களை முழு மையாக தோற்கடித்து விட்டது. இதனால் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளா னோம். எங்களது பேட்டிங்கை பொறுத்தவரை சில ஷாட்டுகள் மோசமாக இருந்தது. அத்துடன் சூழலுக்கு தகுந்தபடி பேட்ஸ்மேன்கள் தங்களை மாற்றிக் கொண்டு ஆட தவறி விட்டனர்' என்றார்.