கிரிக்கெட்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான வெற்றிக்கு இது தான் காரணம்..இந்திய கேப்டன்

72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்தது.

சென்னை,

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் சுற்று முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு அரங்கே றிய குரூப் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஜிம்பாப்வேயை எதிர்கொண்டது.

இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 256 ரன் கள் குவித்தது. பின்னர் 257 இலக்கை நோக்கி ஆடிய ஜிம்பாப்வே 20 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்டுக்கு 184 ரன்களே எடுத்தது.

இதன் மூலம் இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்தது.

வெற்றி தொடர்பாக பேசிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது,

நாங்கள் லீக் கட்டத்தில் நாங்கள் என்ன செய்தோம் அல்லது அகமதாபாத்தில் கடைசி ஆட்டத்தில் என்ன செய்தோம் என்பதைப் பற்றி நாங்கள் அதிகம் யோசிக்கவில்லை. ஆனால், எங்கள் வீடியோ ஆய்வாளர் அனைத்து பேட்டர்கள் மற்றும் அனைத்து பந்து வீச்சாளர்களுக்கும், இந்த ஆண்டு நாங்கள் என்ன செய்தோம் என்பதைப் பற்றி ஒரு ஸ்லைடை உருவாக்கியிருந்தார். அந்த ஸ்லைடை நாங்கள் பார்த்தோம், அதிலிருந்து நிறைய கற்றோம் . எங்கள் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர்.வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அபாரமாக நங்கள் விளையாடுவோம். என தெரிவித்தார்.

வரும் 1ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது. அதில் வெற்றி பெற்றால் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.