கிரிக்கெட்

இந்த சீசன் நிச்சயமாக ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது: மும்பை அணி பயிற்சியாளர்

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை எதிர்கொண்டது.

ராய்ப்பூர்,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராய்ப்பூரில் நடந்த 54-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய ஆர்.சிபி அணி கடைசி பந்தில் வெற்றி இலக்கை எட்டியது.

இந்த நிலையில், தோல்வி தொடர்பாக மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனே அளித்த பேட்டியில் கூறியதாவது,

இந்த சீசன் நிச்சயமாக ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது. எங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அதனை நாங்கள் சிறப்பாக பயன்படுத் தவில்லை. பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் தொடர்ந்து சீரான திறனை வெளிப்படுத்த முடியாததே இந்த நிலைக்கு காரணம். இன்னும் 2 அல் லது 3 போட்டிகளில் வெற்றி கிடைத்திருந்தால் பிளே-ஆப் வாய்ப்பில் நாங்களும் இருந்திருப்போம். ஆனால் அந்த நிலையை எட்டமுடிய வில்லை. இந்த சீசனில் எதில் நாங்கள் தவறு செய்தோம் என்பதை பற்றி ஆராய வேண்டியுள்ளது. ஒரு அணியாக எங்கள் திறமைகளையும், திட் டங்களையும் சரியாக செயல்படுத்த முடியவில்லை.

இக்கட்டான நேரத்தில் எங்களிடம் அனுபவமுள்ள பந்துவீச் சாளர்கள் யாரும் இல்லை. அணியில் அடிக்கடி மாற்றங்கள் செய் தோம் என்று கூற முடியாது. பல மாற்றங்கள் கட்டாயமானவை. காயங் கள் மற்றும் வீரர்கள் இல்லாமை காரணமாக மாற்றங்கள் செய்யவேண் டிய சூழல் ஏற்பட்டது. எங்களிடம் தரமான அணி இருந்தும், முழுமையாக சிறப்பாக செயல்பட முடியவில்லை. எங்களுடைய முக்கிய வீரர்கள் மீது நம்பிக்கை வைத்தே முன்னோக்கி நகர்ந்தோம். எங்கள் அணியில் உள்ள வர்களில் நிறைய பேர் உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றவர்கள். ஆனால் ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட வில்லை என்பதே உண்மை.

இவ்வாறு அவர் கூறினார்.