இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 தொடரின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது.
இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் மூன்று இளம் வீரர்களுக்கு முதல்முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முகமது தய்யப் ஆரிஃப், அலி ஷபீர் மற்றும் சாகிப் கான் ஆகியோர் புதிதாக அணியில் இடம்பிடித்துள்ளனர்.
உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் அடிப்படையில் இவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தய்யப் ஆரிஃப் 7 போட்டிகளில் 727 ரன்கள் குவித்து மூன்று சதங்களை அடித்துள்ளார். அலி ஷபீர் 8 போட்டிகளில் 22 விக்கெட்டுகளையும், சாகிப் கான் 9 போட்டிகளில் 47 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளனர்.
மேலும், ஆல்-ரவுண்டர் ஆமிர் ஜமாலும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேவேளையில் அலி உஸ்மான் மற்றும் அப்துல்லா ஃபசல் ஆகியோர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி இளம் வீரர்களுடன் களமிறங்க உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பாபர் அசாம் (கேப்டன்), ஆமிர் ஜமால், அலி ஷபீர், அராஃபத் மின்ஹாஸ், அசான் அவைஸ், முகமது அப்பாஸ், முகமது காசி கோரி, முகமது சுலைமான், முகமது தாஹா, முகமது தய்யப் ஆரிஃப், ரஸாவுல்லா, சாத் பெய்க், சல்மான் அலி ஆகா, சமீர் மின்ஹாஸ், சாகிப் கான் மற்றும் சவுத் ஷகீல்.