சென்னை,
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. நடப்பு சீசனில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. இன்று காலை 10.15 மணிக்கு சிஎஸ்கே செயலி மற்றும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து டிக்கெட் பெறலாம். கணுக்கால் காயம் காரணமாக சென்னை அணியின் நட்சத்திர வீரர் தோனிக்கு இரண்டு வாரங்கள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தோனி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் முதல் போட்டி இன்று நடைபெறுகிறது. கவுகாத்தியில் நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.