கிரிக்கெட்

கோலியை பின்னுக்குத் தள்ளிய திலக் வர்மா... டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை!

டி20 கிரிக்கெட்டில் 5,000 ரன்களை கடப்பது என்பது மிக முக்கியமான மைல்கல்லாகும்.

ராஞ்சி,

டி20 கிரிக்கெட்டில் திலக் வர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

திலக் வர்மா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய வீரர் திலக் வர்மா அதிரடியாக விளையாடி 44 ரன்கள் குவித்தார்.

இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் குறைவான இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலியை திலக் வர்மா முந்தினார்.

விராட் கோலி

டி20 கிரிக்கெட்டில் 5,000 ரன்களை கடப்பது என்பது மிக முக்கியமான மைல்கல்லாகும். திலக் வர்மா 166 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டி உள்ளார். விராட் கோலி 167 இன்னிங்ஸ்களில் இதனை எட்டியிருந்தார்.

இந்த பட்டியலில் கே.எல். ராகுல் 143 இன்னிங்ஸ்களுடன் முதலிடத்திலும், ருதுராஜ் கெய்க்வாட் 145 இன்னிங்ஸ்களுடன் இரண்டாவது இடத்திலும், சுப்மன் கில் 154 இன்னிங்ஸ்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். அபிஷேக் சர்மா 165 இன்னிங்ஸ்களுடன் அடுத்த இடத்தில் உள்ளார்

SCROLL FOR NEXT