கிரிக்கெட்

ஜிம்பாப்வே வீரரின் ஆசையை நிறைவேற்றிய திலக் வர்மா

இந்திய அணி ஜிம்பாப் வேயை 72 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

மும்பை,

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு சென்னை சேப்பாக்கத் தில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி ஜிம்பாப் வேயை 72 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டம் முடிந்ததும் அந்த அணியின் வேகப் பந்து வீச்சாளர் பிராட் இவான்ஸ், இந்திய பேட்ஸ்மேன் திலக் வர்மாவை சந்தித்து உரையாடினார். அப்போது, எனது சகோதரி ரெபக்கா உங்களது தீவிர ரசிகை. அவருக்காக நீங்கள் பேசும் வீடியோ ஒன்றை அனுப்ப வேண் டும் என்று கேட்டுக் கொண்டார். திலக் வர்மாவும் அதை ஏற்று, குறுகிய நேர வீடியோ பதிவு ஒன்றை அனுப்பினார். அதில், 'ரெபக்கா நீங்கள் எனது ரசிகையாக இருப்பதற்கு நன்றி. நான் ஜிம்பாப்வே வந்து விளையாடும் போது உங்களை நேரில் பார்ப்பேன் என்று நம்புகிறேன். உங்களது சகோதரர் அற்புதமான பவுலர். இந்த ஆட்டத்தில் உண்மையிலேயே சிறப்பாக பந்து வீசினார். விரைவில் சந்திப்போம்' என்று அதில் திலக் வர்மா கூறியி ருந்தார்.