image courtesy:twitter/@TNPremierLeague  
கிரிக்கெட்

திருப்பூர் சிறப்பான பந்துவீச்சு... கோவை கிங்ஸ் 137 ரன்கள் சேர்ப்பு

திருப்பூர் தரப்பில் அதிகபட்சமாக இசக்கிமுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

நெல்லை,

டி.என்.பி.எல். தொடரில் நெல்லையில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கோவை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. திருப்பூர் அணியின் பந்துவீச்சாளரான இசக்கிமுத்து சிறப்பாக பந்துவீசி கோவை அணிக்கு கடும் அழுத்தம் கொடுத்தார்.

அந்த அழுத்தத்திலிருந்து கோவை அணியால் கடைசி வரை நிமிர முடியவில்லை. அந்த அணியில் 3 வீரர்கள் மட்டுமே 20 ரன்களை தாண்டினர். கேப்டன் ஷாருக்கான் 19 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

20 ஓவர்கள் முடிவில் கோவை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் அடித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக பாலசுப்பிரமணியம் சச்சின் 24 ரன்கள் அடித்தார். திருப்பூர் தரப்பில் இசக்கிமுத்து 3 விக்கெட்டுகளும், சாய்கிஷோர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி திருப்பூர் அணி களமிறங்க உள்ளது.

SCROLL FOR NEXT