நத்தம்,
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் சேப்பாக் அணியின் ஆஷிக் 2 ரன்களில் சதத்தை தவறவிட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெற்று வரும் 10-வது டிஎன்பிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் அணிக்கு கே. ஆஷிக் அபாரமாக விளையாடி 56 பந்துகளில் 98 ரன்கள் குவித்தார். சதம் அடிக்க இன்னும் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
மேலும், நாராயண் ஜெகதீசன் 27 ரன்களும், அஷ்வந்த் வல்தப்பா ஆட்டமிழக்காமல் 28 ரன்களும் எடுத்தனர். இதன் உதவியுடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 206 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி விளையாட உள்ளது.