திண்டுக்கல்,
10வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இத்தொடரில் இன்று நடைபெற்று வரும் 9வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த கோவை வீரர்கள் சேப்பாக் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
இறுதியில் திண்டுக்கல் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஷிவம் சிங் அதிகபட்சமாக 25 ரன்கள் சேர்த்தார்.
சிறப்பாக பந்து வீசிய சேப்பாக் அணியின் அபிஷேக், அஸ்வந்த் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் களமிறங்கி விளையாட உள்ளது.