சென்னை,
8 அணிகள் பங்கேற்றுள்ள 10வது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இத்தொடரின் முதல்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தொடரின் 2ம் கட்ட போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 26வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோத உள்ளன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.