கிரிக்கெட்

டிஎன்பிஎல் 2026 - சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை வீழ்த்திய திருச்சி கிராண்ட் சோழாஸ்

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி தொடர்ந்து 2-வது தோல்வியை சந்தித்தது.

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டிஎன்பிஎல்

10-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும். இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழஸ் அணிகள் மோதியது.

முதலில் ஆடிய சேலம் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்கள் கவின் 38 ரன்னும், ஹரி நிஷாந்த் 36 ரன்னும் எடுத்தனர். திருச்சி தரப்பில் அந்தோணி தாஸ். சஞ்சய் யாதவ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

அடுத்து ஆடிய திருச்சி அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ராஜ்குமார் ஆட்டமிழக்காமல் 67 ரன்னும், ஜெ.கவுசிக் 46 ரன்னும் எடுத்து அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினர். 2-வது ஆட்டத்தில் ஆடிய திருச்சி அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். சேலம் அணி தொடர்ந்து 2-வது தோல்வியை சந்தித்தது.