கோப்புப்படம் 
கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: நேரடி டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை 2 கட்டமாக நடத்தப்படுகிறது.

சென்னை,

8 அணிகள் பங்கேற்கும் 10-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை 2 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட ஆட்டங்கள் (4-15) திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்திலும், இறுதிப்போட்டி உள்ளிட்ட 2-வது கட்ட ஆட்டங்கள் (18-28) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்திலும் நடக்கிறது.

இந்த தொடரின் முதல் கட்ட ஆட்டங்களுக்கான நேரடி டிக்கெட் விற்பனை நத்தம் என்.பி.ஆர். கல்லூரி நுழைவுவாயிலில் அமைக்கப்பட்ட கவுண்ட்டரில் இன்று தொடங்குகிறது. தினசரி காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை டிக்கெட் விற்பனை நடைபெறும். இந்த போட்டிக்கான டிக்கெட் கட்டணம் ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தவிர District.in இணையதளம் மற்றும் செயலி வாயிலாகவும் ஆன்லைனில் டிக்கெட்டுகளை பெற்றுகொள்ளலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.