சென்னை,
சென்னையில் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளநிலையில் டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது.
8 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில், முதற்கட்ட ஆட்டங்கள் திண்டுக்கல் நத்தத்தில் நடந்தது. இதுவரை 20 ஆட்டங்கள் நடந்துள்ளன. புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களில் முறையே மதுரை பாந்தர்ஸ் (8 புள்ளி), சேப்பாக் சூப்பர் கில்லீல் (6 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (6 புள்ளி), நெல்லை ராயல்ஸ் கிங்ஸ் (6 புள்ளி) ஆகிய அணிகள் வகிக்கின்றன.
இறுதிப்போட்டி உள்பட 2-வது கட்ட ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை முதல் 28-ந்தேதி வரை நடக்கிறது. நாளைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்னும் 12 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.
இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள கவுண்ட்டரில் காலை 10.30 மணியில் இருந்து டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம். குறைந்த விலையாக ரூ.100-க்கு விற்கப்படுகிறது. இதே போல் District.in என்ற இணையத்தளம் மூலமாக டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம்.