முதலில் பேட் செய்த நெல்லை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. சேப்பாக் அணி 17.2 ஓவர்களில் 154 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது .
மொத்தம் உள்ள 32 ஆட்டங்களில் திண்டுக்கல்லில் 20 போட்டிகளும், சென்னையில் 12 ஆட்டங்களும் நடக்கிறது. 16 மற்றும் 17ந் தேதி ஓய்வு தினமாகும்.
8 அணிகள் பங்கேற்கும் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 10-வது சீசன் இன்று நத்தத்தில் கோலாகலமாக தொடங்கியது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நடப்பு சாம்பியன் திருப்பூர் தமிழன்ஸ், கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் நத்தத்தில் இன்று (புதன்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன.
தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான திருப்பூர் தமிழன்ஸ் அணியை திண்டுக்கல் டிராகன்ஸ் வீழ்த்தி வெற்றியுடன் தொடரை தொடங்கியது.
இன்று திருச்சி கிராண்ட் சோழாஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி வெற்றது.
இன்றைய 2-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாஸை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது.
நெல்லை அணியில் அதிஷ் எஸ்.ஆர். 24 பந்துகளில் 41 ரன்கள், ரித்திக் ஈஸ்வரன் 18 பந்துகளில் 36 ரன்கள், கேப்டன் சோனு யாதவ் ஆட்டமிழக்காமல் 16 பந்துகளில் 35 ரன்கள், முகமது அத்னான் கான் ஆட்டமிழக்காமல் 9 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை 200 ரன்களை தாண்ட செய்தனர்.
இதையடுத்து, 20 ஓவர்கள் முடிவில் நெல்லை அணி 204 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களம் இறங்கியது.
பின்னர் 205 ரன் இலக்கை நோக்கி சேப்பாக் சூப்பர் கில்லீசின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஜெகதீசனும், வசீம் அகமதுவும் களம் புகுந் தனர். ரோகித்தின் ஓவரில் ஜெகதீசன் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விரட்டிய டித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். ஸ்கோர் 30 ஆக உயர்ந்த போது, வசீம் அகமது 7 ரன்னில் கேட்ச்சாகி நடையை கட்டினார். ஜெகதீ சன் (27 ரன், 13 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) ஹரிசின் சுழலில் கிளீன் போல்டானார். ஆஷிக் (13 ரன்), ராம் அரவிந்த் (10 ரன்) நிலைக்க வில்லை. 75 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து கில்லீஸ் தடுமாறியது.
இதைத் தொடர்ந்து தினேஷ் ராஜ் (29 ரன். 17 பந்து, 2 பவுண்டரி, 2 சிக் சர்), மோகனபிரசாத் (19 ரன், 10 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) சில சிக்சர்களை பறக்க விட்டு உத்வேகம் அளித்தனர். 8-வது வரிசையில் அடியெடுத்து வைத்த அறிமுக வீரர் அஷ்வந்த் வல்தபா அதிரடியாக மட் டையை சுழட்டி நம்பிக்கை தந்தார். அவர் தூக்கியடித்த ஒரு சிக்சர் 100 மீட்டர் தூரத்துக்கு ஓடியது. ஆனால் வல்தபா (31 ரன், 13 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) அடங்கியதும் கில்லீசும் நம்பிக்கையும் தகர்ந்தது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 17.2 ஓவர்களில் 154 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் நெல்லை அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஹரிஷ் 4 விக்கெட்டு களை சாய்த்தார். அவரே ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் ஜெகதீசன் 12 ரன் எடுத்த போது. டி.என்.பி.எல். வரலாற்றில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை பாபா அபராஜித்திடம் (2,447 ரன்) இருந்து தட்டிப்பறித்தார். ஜெகதீசன் இதுவரை 76 ஆட்டங்களில் ஆடி ஒரு சதம், 22 அரைசதம் உள்பட 2,467 ரன் எடுத்துள்ளார்.