கிரிக்கெட்

டிஎன்பிஎல் கிரிக்கெட் - திண்டுக்கல் அபார பந்துவீச்சு... 107 ரன்களில் சுருண்ட திருப்பூர்

திருப்பூர் தமிழன்ஸ் அணி 15.4 ஓவர்களில் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

நத்தம்,

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் திண்டுக்கலின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திருப்பூர் 107 ரன்களில் சுருண்டது.

டிஎன்பிஎல்

8 அணிகள் பங்கேற்கும் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் புதிய சீசன் இன்று நத்தத்தில் கோலாகலமாக தொடங்கியது. தொடக்கப் போட்டியில் நடப்பு சாம்பியனான திருப்பூர் தமிழன்ஸ் அணியும், முன்னாள் சாம்பியனான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதி வருகின்றன.

டாஸ்

இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது.

அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்

திண்டுக்கல் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திருப்பூர் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அணியில் அமித் சாத்விக் மட்டுமே அதிகபட்சமாக 20 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் தாக்குப்பிடிக்கவில்லை.

108 ரன்கள் வெற்றி இலக்கு

இதன் காரணமாக திருப்பூர் தமிழன்ஸ் அணி 15.4 ஓவர்களில் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. திண்டுக்கல் டிராகன்ஸ் தரப்பில் புவனேஷ்வரன் மற்றும் நிரங்கர் சர்மா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர். இதையடுத்து 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்க உள்ளது.