கிரிக்கெட்

டிஎன்பிஎல்: திண்டுக்கல் - மதுரை போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம்

திண்டுக்கல் - மதுரை அணிகள் மோத உள்ளன.

திண்டுக்கல்,

10வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இத்தொடரின் முதற்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற உள்ள 15வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் - மதுரை அணிகள் மோத உள்ளன. இந்த நிலையில் போட்டி நடைபெறும் பகுதியில் மழை பெய்து வருவதால் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.