கிரிக்கெட்

டிஎன்பிஎல் - ஹரி ராகவேந்திரா போராட்டம் வீண்... மதுரையை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவர்களில் 201 ரன்கள் மட்டுமே எடுத்தது.

திண்டுக்கல்,

மதுரை பேந்தர்ஸ் அணியை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீழ்த்தியது.

டிஎன்பிஎல்

10-வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதற்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

19-வது லீக் ஆட்டம்

நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டிக்கான டாஸை வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

240 ரன்கள் குவிப்பு

தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 240 ரன்கள் குவித்தது. இதையடுத்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை களமிறங்கியது.

201 ரன்கள்

இலக்கை நோக்கி விளையாடிய மதுரை பாந்தர்ஸ் அணிக்கு ஹரி ராகவேந்திரா சிறப்பாக விளையாடி 55 பந்துகளில் 98 ரன்கள் குவித்தார். இதில் 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் அடங்கும்.

இருப்பினும், மற்ற வீரர்களின் பங்களிப்பு போதிய அளவில் இல்லாததால் மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது.

முதல் தோல்வி

இதன் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இது இந்த தொடரில் மதுரை அணியின் முதல் தோல்வியாகும்.