கிரிக்கெட்

டிஎன்பிஎல்: சேப்பாக்கிற்கு எதிராக மதுரை பந்து வீச்சு தேர்வு

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கியது

திண்டுக்கல்,

10வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இத்தொடரின் முதற்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ்

அதன்படி, இத்தொடரில் இன்று நடைபெற உள்ள 19வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற மதுரை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. சேப்பாக் அணியின் தொடக்க வீரர்களாக ஜெகதீசன் , ஹரிஹரன் களமிறங்க உள்ளனர்.