கிரிக்கெட்

டிஎன்பிஎல் - நெல்லைக்கு எதிராக டாஸ் வென்ற மதுரை பேட்டிங் தேர்வு

28-வது லீக் ஆட்டத்தில் நெல்லை-மதுரை அணிகள் மோதுகின்றன.

சென்னை,

28-வது லீக் ஆட்டத்தில் நெல்லைக்கு எதிராக டாஸ் வென்ற மதுரை பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

டிஎன்பிஎல்

8 அணிகள் பங்கேற்றுள்ள 10வது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இத்தொடரின் முதல்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தொடரின் 2ம் கட்ட போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நெல்லை - மதுரை

அதன்படி, இன்று நடைபெறும் 28-வது லீக் ஆட்டத்தில் நெல்லை-மதுரை அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.