கிரிக்கெட்

டிஎன்பிஎல்: ராஜ்குமார், சுரேஷ் குமார் அரைசதம் விளாசல்... திண்டுக்கல்லுக்கு 198 ரன்கள் இலக்கு நிர்ணயித்த திருச்சி

இறுதியில் 19 ஓவர்கள் முடிவில் திருச்சி அணி 197 ரன்கள் எடுத்தது.

சென்னை,

10-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 198 ரன்கள் இலக்காக நிர்ண்யித்துள்ளது திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி.

டாஸ் வென்ற திண்டுக்கல்

இந்த போட்டிக்கான டாஸை வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

41 ரன்கள் எடுத்த திருச்சி

திருச்சி அணி 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை பெய்ததால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சிறிது நேரம் நிறுத்தப்பட்ட பின்னர் 19 ஓவர்களாக குறைக்கப்பட்டு ஆட்டம் மீண்டும் துவங்கியது.

198 ரன்கள் இலக்கு

அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ராஜ்குமார் மற்றும் சுரேஷ் குமார் இருவரும் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்து அசத்தினர். அப்போது சுரேஷ் குமார் 60 (41) ரன்கள் எடுத்தநிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த சஞ்சய் யாதவ், ராஜ்குமாருடன் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டினார்.

அப்போது ராஜ்குமார் 71(42) ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து களமிறங்கிய ஜாபர் ஜமாலும் அதிரடி காட்ட ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இறுதியில் 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து திருச்சி அணி 197 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் களமிறங்க உள்ளது.