கிரிக்கெட்

டி.என்.பி.எல்.: சேலம் அணியை வீழ்த்தி நெல்லை வெற்றி

நெல்லைக்கு இது 4-வது வெற்றியாகும்.

சென்னை,

சென்னையில் நடந்து வரும் டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற் றிரவு நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்- சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் சந்தித்தன. இதில் முதலில் பேட் செய்த சேலம் அணி 7 விக்கெட்டுக்கு 140 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. அதிகபட்சமாக ஹரிநிஷாந்த் 36 ரன்களும், ஈஸ்வர் 31 ரன்களும் எடுத்தனர். நெல்லை வேகப் பந்து வீச்சாளர் இமானுவேல் செரியன் 3 விக்கெட்டும். சுழற் பந்து வீச்சாளர் ஹரிஷ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து களமிறங்கிய நெல்லை அணி 16.1 ஓவர்களில் 5 விக் கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் சந் தோஷ்குமார் (50 ரன், 7 பவுண்டரி, 2 சிக்சர்), அதிஷ் (50 ரன், 3 பவுண்டரி, 4 சிக்சர்) அரைசதம் அடித்தனர். 6-வது லீக்கில் ஆடிய நெல்லைக்கு இது 4-வது வெற்றியாகும். அத்துடன் புள்ளிபட்டியலிலும் முதலிடத்துக்கு உயர்ந்தது.