சென்னை,
டிஎன்பிஎல் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் கோவை அணி திண்டுக்கல்லுக்கு 172 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
8 அணிகள் பங்கேற்றுள்ள 10வது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தொடரின் 2ம் கட்ட போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
தொடரில் இன்று நடைபெற்று வரும் 25-து லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் - திருண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதைனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 12.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டநிலையில், பின்னர் ஆட்டம் 16 ஓவர்களாக குறிக்கப்பட்டு மீண்டும் துவங்கியது.
16 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷாருக்கான் 59 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில், 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்க உள்ளது.