கிரிக்கெட்

டிஎன்பிஎல்: நெல்லை அணிக்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயித்த திருச்சி

திருச்சி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.

திண்டுக்கல்,

10வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இத்தொடரின் முதற்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற உள்ள 12வது லீக் ஆட்டத்தில் நெல்லை திருச்சி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நெல்லை அணியின் கேப்டன் சோனு யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய திருச்சி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. திருச்சி அணியில் ஜெயராமன் அரைசதமடித்து 58 ரன்கள் எடுத்தார். ராஜ்குமார் 45 ரன்கள் எடுத்தார். நெல்லை அணியில் சச்சின் ரதி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.