சென்னை,
டிஎன்பிஎல் தொடரில் இன்றைய 26-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக்கிற்கு எதிராக டாஸ் வென்ற திருச்சி பேட்டிங் தேர்வுசெய்துள்ளது.
8 அணிகள் பங்கேற்றுள்ள 10வது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தொடரின் 2ம் கட்ட போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
தொடரில் இன்று நடைபெறும் 26-வது லீக் ஆட்டத்தில் திருச்சி - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.