கிரிக்கெட்

டிரேட் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: மும்பை அணி விளக்கம்

எந்தவிதமான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையும் தற்போது நடைபெறவில்லை என்று மும்பை அணி தெரிவித்துள்ளது.

மும்பை,

ஹர்திக் பாண்டியாவை சுற்றியுள்ள டிரேட் வதந்திகள் ஐபிஎல் வட்டாரத்தில் தொடர்ந்து பேசுபொருளாகி வருகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியாவை மற்றொரு ஐபிஎல் அணிக்கு மாற்றுவது குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையும் தற்போது நடைபெறவில்லை என்று மும்பை அணி தெரிவித்துள்ளது.

இப்போது எந்த வீரர் டிரேட் பேச்சுவார்த்தையும் தொடங்கவில்லை. சீசன் முடிந்த பின் நடைபெறும் அணியின் முழுமையான மதிப்பாய்வு முடிந்த பிறகே, தக்கவைப்பு அல்லது டிரேட் குறித்து முடிவு எடுக்கப்படும் என மும்பை அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வெளியான சில தகவல்களின்படி, மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ஹர்திக் பாண்ட்யா தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது.ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக ஆயுஷ் மஹாத்ரே மற்றும் ஷிவம் துபே ஆகிய வீரர்களை பெற மும்பை விரும்பியதாக கூறப்பட்டது.