கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வீராங்கனை குடும்பத்தில் சோகம்; தாயை தொடர்ந்து சகோதரியும் மரணம்

இந்திய கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தியின் தாயை தொடர்ந்து சகோதரியும் கொரோனா பாதிப்புக்கு மரணம் அடைந்து உள்ளார்.

புதுடெல்லி,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக இருந்து வருபவர் வேதா கிருஷ்ணமூர்த்தி. அவருக்கு கடந்த ஏப்ரலில் நடந்த கொரோனா பரிசோதனையில் பாதிப்பு இல்லை என முடிவு வெளிவந்தது. ஆனால், அவரது சகோதரிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அவர் வைரசுடன் போராடி வருகிறார் என்று டுவிட்டரில் பதிவிட்டு அதற்காக அனைவரும் பிரார்த்தனை செய்து கொள்ளும்படி வேதா கிருஷ்ணமூர்த்தி கேட்டு கொண்டார்.

இவரது தாயார் கடந்த ஏப்ரலில் கொரோனா பாதிப்புக்கு மரணம் அடைந்த நிலையில், இரண்டு வார போராட்டத்திற்கு பின்னர் அவரது சகோதரியும் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்து உள்ளார்.

இதனால், கிரிக்கெட் வீராங்கனையின் குடும்பத்தில் அடுத்தடுத்து சோகம் நடந்தேறியுள்ளது. அவருக்கு சக வீராங்கனைகள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT