கிரிக்கெட்

டிராவிஸ் ஹெட் சதம்: ஆஸ்திரேலிய அணி 356 ரன்கள் குவிப்பு

50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் குவித்துள்ளது.

ஹராரே,

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதிரடியாக பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் குவித்துள்ளது.

டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்களை சிதறடித்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசினர்.

ஆஸ்திரேலிய அணியில்  டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி சதமடித்தார். மேலும் மிட்சேல் மார்ஷ் 53 ரன்களும், கூப்பர் கனலி 78 ரன்களும் எடுத்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 356 ரன்கள் குவித்தது.

ஜிம்பாப்வே அணியில் பிராட் எவன்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

SCROLL FOR NEXT