கிரிக்கெட்

முத்தரப்பு கிரிக்கெட் இறுதிப்போட்டி: ஆப்கானிஸ்தானுக்கு 170 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே

டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

ஷார்ஜா,

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு 170 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முத்தரப்பு கிரிக்கெட்

ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, வங்காளதேசம் இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த 17ம் தேதி தொடங்கியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இத்தொடர் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது.

இறுதிப்போட்டி

அதன்படி லீக் சுற்றில் முதல் இரு இடங்களை பிடித்த ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இந்நிலையில், முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதி வருகின்றன.

டாஸ்

ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

ஜிம்பாப்வே 169 ரன்களுக்கு ஆல் அவுட்

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 43.3 ஓவரில் 169 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா அதிகபட்சமாக 68 ரன்கள் சேர்த்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் அந்த அணியின் ரஷித் கான் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கி விளையாடி வருகிறது.

SCROLL FOR NEXT