கிரிக்கெட்

இலங்கையில் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: திலக் வர்மா தலைமையில் இந்திய ‘ஏ’ அணி அறிவிப்பு

15 வயதுடைய வைபவ் சூர்யவன்ஷி இந்திய 'ஏ' கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளை சேர்ந்த 'ஏ' அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இலங்கையின் தம்புல்லாவில் அடுத்த மாதம் (ஜூன்) 9-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 15 வயது வைபவ் சூர்ய வன்ஷி அணியில் இடம் பிடித்துள்ளார்.

இந்திய 'ஏ' கிரிக்கெட் அணி வருமாறு:-

திலக் வர்மா (கேப்டன்), பிரியான்ஷ் ஆர்யா, வைபவ் சூர்ய வன்ஷி, ரியான் பராக் (துணை கேப்டன்), ஆயுஷ் பதோனி, நிஷாந்த் சந்து, ஹர்ஷ் துபே, சூர்யான்ஷ் ஷெட்கே, பிரப்சிம்ரன் சிங், குமார் குஷக்ரா, விப்ராஜ் நிகம், யாஷ் தாக்குர், யுத்விர் சிங், அன்ஷூல் கம்போஜ், அர்ஷத் கான்.

ஒருநாள் போட்டி முடிந்ததும் இந்திய 'ஏ' அணி, இலங்கை 'ஏ' அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டியில் (4 நாள் ஆட்டம்) ஆடுகிறது. இந்த போட்டிக்கான இந்திய 'ஏ' அணி பின்னர் அறிவிக்கப்படும்.