ராவல்பிண்டி,
ஒருநாள் சர்வதேச முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில், இலங்கை அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.
பாகிஸ்தானின் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 305 ரன்கள் குவித்தது.
பாகிஸ்தான் அணி சார்பில் சிறப்பாக விளையாடிய சல்மான் ஆஹா 107 (90) ரன்கள் குவித்து அசத்தினார். இலங்கை அணியின் சார்பில் அதிகபட்சமாக மலிங்கா 4 விக்கெட்டுகளும், பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து, 306 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 268 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இலங்கை அணி சார்பில் பவன் ரத்நாயக்க 79 ரன்களும், ஜனித் லியனகே 60 ரன்களும், கமிந்து மெண்டிஸ் 44 ரன்களும் எடுத்தனர்.
இலங்கை அணியின் வீரர்கள் சிலர் சிறப்பாகச் செயற்பட்ட போதிலும், பின்வரிசை வீரர்களால் எதிர்பார்த்த அளவுக்கு ரன்களை எடுக்க முடியவில்லை.
இதனால் வெற்றியை நெருங்கியிருந்த இலங்கை அணி 37 ரன்களில் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி தனது பயணத்தை வெற்றியுடன் தொடங்கி உள்ளது.