கிரிக்கெட்

முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்திய அணி 349 ரன்கள் குவிப்பு

இந்திய அணி 49 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்தது.

கொழும்பு,

இலங்கை ஏ, இந்தியா ஏ, ஆப்கானிஸ்தான் ஏ ஆகிய 3 அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 2வது ஆட்டத்தில் இந்தியா ஏ, ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் இம்ரான் மிர் பந்துவீச்சை தேர்வு செய்தார். மழை காரணமாக ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது.அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடியது. இதனால் இந்திய அணி 49 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் பிரப்சிம்ரன் சிங் 84 ரன்களும், ருதுராஜ், திலக் வர்மா தலா 66 ரன்களும் எடுத்தனர்.ஆப்கானிஸ்தான் அணியில் அப்துல்லா அமத்ஷாய் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

SCROLL FOR NEXT