புதுடெல்லி,
நமீபியா தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியின் மற்ற இரு அணிகளுடன் தலா 2 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடித்துள்ள தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளன.
இந்நிலையில், முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் பியோர்ன் போர்டுயின் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.