கிரிக்கெட்

முத்தரப்பு டி20 இறுதிப்போட்டி: தென் ஆப்பிரிக்கா அணி 205 ரன்கள் குவிப்பு

20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு தென் ஆப்பிரிக்கா 205 ரன்கள் குவித்தது.

விண்ட்ஹோக்,

முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்கா அதிரடியாக விளையாடிய நிலையில், ஜோர்டன் ஹெர்மன் மற்றும் கானர் எஸ்டர்ஹைசன் ஆகியோர் அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்தனர். தொடர்ந்து வந்த வீரர்களும் வேகமாக ரன்கள் சேர்த்தனர். ஜோர்டன் ஹெர்மன் அரைசதம் அடித்தார்.

இறுதிக்கட்டத்தில் டுவான் ஜான்சன் உள்ளிட்ட வீரர்கள் அதிரடியாக ரன்கள் சேர்த்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு தென் ஆப்பிரிக்கா 205 ரன்கள் குவித்தது. இதையடுத்து முத்தரப்பு தொடரின் கோப்பையை வெல்ல ஜிம்பாப்வே அணிக்கு 206 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT