விந்தோக்,
தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
நமீபியா , தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
நமீபியா தலைநகர் விந்தோக் நகரில் நடைபெறும் இன்று நடைபெறும் 4வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, தென் ஆப்பிரிக்க வீரர்கள் முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளனர். இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.