கிரிக்கெட்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நெதர்லாந்து அணி தகுதி

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நெதர்லாந்து அணி தகுதி பெற்றுள்ளது.

துபாய்,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் துபாயில் நேற்று நடந்த பிளே-ஆப் சுற்று ஆட்டம் ஒன்றில் நெதர்லாந்து அணி, ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதியது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த அமீரக அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 80 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் பிரான்டன் குளோவர் 4 விக்கெட்டுகளை அள்ளினார்.

இந்த எளிய இலக்கை நெதர்லாந்து அணி 15.1 ஓவர்களில் எட்டிப்பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. அத்துடன் தொடர்ந்து 3-வது முறையாக உலக கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றது.

SCROLL FOR NEXT