ஹராரே,
16 அணிகள் பங்கேற்கும் 19 வயதுக்குட்பட்டவருக்கான (யு19) ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வருகிறது.ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் 4 பிரிவில் இருந்தும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும்.
இந்த சுற்றில் விளையாடும் 6 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இதன் முடிவில் 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.இதில் நேற்று நடந்த சூப்பர்6 சுற்றில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 314 ரன்கள் குவித்தது.
315 ரன் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 292 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் ஆஸ்திரேலியா 22 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் குரூப்1-ல் ஆஸ்திரேலிய அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.