கிரிக்கெட்

யு19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் மஹூப் கான் பேட்டிங்கை தேர்வு செய்தார்

புலவாயோ,

16-வது யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது. இதில் இன்று அரையிறுதிப் போட்டி புலவாயோவில் நடைபெற்று வருகிறது.

இதில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் மஹூப் கான் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.