கிரிக்கெட்

கிரிக்கெட் மைதானத்தில் தேனீக்கள் கொட்டியதில் நடுவர் உயிரிழப்பு

தேனீக்கள் கூட்டம் திடீரென மைதானத்தில் நுழைந்து வீரர்கள், நடுவர்களை தாக்கியது.

லக்னோ,

உத்தர பிரதேசம் மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஒரு போட்டியில் கான்பூரைச் சேர்ந்த மாணிக் குப்தா (65), நடுவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.


அப்போது, தேனீக்கள் கூட்டம் திடீரென மைதானத்தில் நுழைந்து வீரர்கள், நடுவர்களை தாக்கியது.

இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட நடுவர் மாணிக் குப்தா மைதானத்திலேயே மயக்கம் போட்டு விழுந்தார். அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மைதானத்தில் தேனீக்கள் கொட்டியதில் அம்பயர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.