சென்னை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரி வில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரி வில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் தலா 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளை யாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற் றுக்கு முன்னேறும்.
இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மாலை நடைபெற்ற 53-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை எதிர்கொண்டது.
தொடக்கத்தில் லக்னோ அணி அதிரடியாக விளையாடியது. குறிப்பாக லக்னோ அணியின் ஜோஷ் இங்கிலிஷ் பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டார். சென்னை அணியின் பந்துவீச்சை அவர் துவம்சம் செய்தார்.
மறுபுறம் மார்ஷ் 10 ரன்களில் வெளியேறினார். பின்னர் பூரன்1 ரன்கள் எடுத்து ஆட்டமிழ்ந்தார். அரைசதமடித்த இங்கிலிஷ் 33 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து பின்னர் ரிஷப் பண்ட் 15 ரன்களில் வெளியேறினார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் ஓவர்டன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து விளையாடிய சென்னை அணி சிறப்பான தொடக்கம் கண்டது. சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெயிக்வாட் இருவரும் சிறப்பாக விளையாடினர். சாம்சன் 28 ரன்களில் வெளியேறினார். பின்னர் உர்வில் படேல் லக்னோ அணியின் பந்துவீச்சை சிதறடித்தார். உர்வில் படேல் 13 பந்துகளில் 50 ரன்கள் (அரை சதம்) விளாசினார். அவர் 23 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ருதுராஜ் கெயிக்வாட் 42 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் சென்னை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் துபே 2 சிக்சர்கள் பறக்க விட்டார். இதனால் சென்னை அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. இதனால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.