கிரிக்கெட்

28 சிக்ஸர்கள்... 204 ரன்கள்... யுஏஇ அணியை பந்தாடிய வைபவ் சூர்யவன்சி

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ ஏ அணி முதலில் பேட்டிங் செய்தது.

தோஹா,

ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரில் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி, ஐக்கிய அரபு அமீரக ஏ அணிக்கு எதிராக அதிரடியாக 204 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.

டாஸ் வென்ற யுஏஇ

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ ஏ அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான ஆர்யான்ஷ் சர்மா 2 ரன்களிலும், அன்ஷ் டாண்டன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி தொடக்கத்திலேயே தடுமாறியது.

ஹர்பிரீத் சிங் பாட்டியா அபார சதம்

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய ஹர்பிரீத் சிங் பாட்டியா சதமடித்து அணியை சரிவிலிருந்து மீட்டார். அவர் 144 பந்துகளில் 130 ரன்கள் எடுத்தார். முகமது ஷஹ்தாத் 28 ரன்களும், ஈதன் டி'சோசா 25 ரன்களும் சேர்த்தனர்.

அர்ஷத் கான் அசத்தல்

இந்திய அணியின் பந்துவீச்சில் அர்ஷத் கான் சிறப்பாகச் செயல்பட்டு 10 ஓவர்களில் 43 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் யுஏஇ அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது.

28 பந்துகளில் சதம்

250 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா ஏ அணிக்கு வைபவ் சூரியவன்ஷி அதிரடியான தொடக்கத்தை அளித்தார். வெறும் 28 பந்துகளில் சதத்தை எட்டிய அவர், தொடர்ந்து அதிரடியாக விளையாடி 52 பந்துகளில் இரட்டை சதத்தையும் நிறைவு செய்தார். இறுதியில் 53 பந்துகளில் 204 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 28 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்

7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

வைபவ் சூரியவன்ஷியின் வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆட்டத்தால் இந்தியா ஏ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம், அதிவேக இரட்டைச் சதம் என ஒரே இன்னிங்ஸில் பல சாதனைகளைப் படைத்து வைபவ் கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

SCROLL FOR NEXT