கிரிக்கெட்

வைபவ் சூர்யவன்ஷி அபாரமான திறமை கொண்ட வீரர்: சிகந்தர் ராசா

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஹராரே சென்றடைந்துள்ளது.

ஹராரே,

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் சமீபத்தில் விளையாடியது. இதில், முதல் டி20 ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. பின்னர் நடைபெற்ற 4 டி20 ஆட்டங்களிலும் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றிபெற்றது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-0 என்ற புள்ளிகள் கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.

இந்த தொடரில் 3 போட்டிகளில் களமிறங்கிய இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 14, 13, 15 ரன்களில் முறையே ஆட்டமிழந்தார்.இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தது.

இந்த நிலையில், வைபவ் சூர்யவன்ஷி தொடர்பாக ஜிம்பாப்வே கேப்டன் சிகந்தர் ராசா கூறியதாவது,

வைபவ் மிகவும் அபாரமான திறமை கொண்ட கிரிக்கெட் வீரர். வெறும் 15 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் ஒரு சிறுவனை, இரண்டு அல்லது மூன்று போட்டிகளின் அடிப்படையில் விமர்சிப்பது நியாயமல்ல. அவரை சரியான முறையில் வழிநடத்தி, கவனமாக வளர்த்தெடுத்தால், வைபவ் இந்த தலைமுறையின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக உருவெடுக்கும் திறன் கொண்டவர் என்று நான் நம்புகிறேன்.என தெரிவித்தார்.

ஜிம்பாப்வேக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஹராரே சென்றடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.