மும்பை,
அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி,2 டி20 ஆட்டத்திலும் தோல்வியை சந்தித்தது.2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் அயர்லாந்து கைப்பற்றி இந்தியாவுக்கு எதிராக முதல் முறையாக டி20 தொடரை வென்று புதிய வரலாறு படைத்தது. இந்த நிலையில், 2 போட்டிகளிலும் இந்திய அணியில் இடம் பெற்ற இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கவில்லை.
தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டி பாதியில் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதில் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் விளையாடாதது தொடர்பாக பேசிய முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி,
வைபவ் சூர்யவன்ஷி அயர்லாந்தில் விளையாடியிருக்க வேண்டும். அங்குள்ள ஆடுகளம் மிகவும் மெதுவாகவும், பந்து எழும்பாத தன்மையுடனும் இருக்கும்; அது ஒரு சிறிய மைதானம் என்பதால், அவர் பந்தை மைதானத்தின் கூரைக்கே அடித்திருப்பார். அவர் எதிரணியினரைத் துவம்சம் செய்திருப்பார். கூடிய விரைவில் அவருக்கு ஒரு வாய்ப்பளியுங்கள். என தெரிவித்துள்ளார்.